அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளில் பிரமாண்டமாகத் தொடங்கியுள்ள 2026 பிஃபா உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரின் குழு ‘ஏ’ க்கான இரண்டாவது லீக் போட்டியில், செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தென் கொரியா அணி திரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
இப்போட்டியானது மெக்சிகோவின் குவாடலஜாரா மைதானத்தில் (Guadalajara Stadium) நடைபெற்றது.
