Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பட்டுப்புடவை!

ஆனி 6, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் மங்கள்யான்  திட்டத்தின் துணை செயற்பாட்டு இயக்குநராகப் பணியாற்றிய  நந்தினி ஹரிநாத்தின் பட்டுப்புடவை ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இவரது வாழ்க்கையில் மிக முக்கியமான நாளில் அவர் உடுத்திய பட்டுப்புடவை, தற்போது அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித்சோனியன் தேசிய விமான மற்றும் விண்வெளி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மங்கள்யான் விண்கலத்தை பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து வெளியேற்றி, செவ்வாய் கிரகத்தை நோக்கிய அதன் 300 நாள் பயணத்தைத் தொடங்கிய மிக முக்கியமான தருணத்தில் நந்தினி இந்த சிவப்பு மற்றும் நீல நிற பட்டுப்புடவையை அணிந்திருந்தார்.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக, செப்டம்பர் 24, 2014 அன்று மங்கள்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதன் மூலம் முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

மங்கள்யான் வெற்றியின் போது இஸ்ரோவில் புடவை அணிந்த பெண் விஞ்ஞானிகள் மற்றும் ஊழியர்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி உலகளாவிய கவனத்தைப் பெற்றது.

இதைக் கண்டு ஈர்க்கப்பட்ட ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் விண்வெளி வரலாற்றுப் பொறுப்பாளர் மேட் ஷிண்டெல், 2020 ஆம் ஆண்டு நந்தினியைத் தொடர்புகொண்டு, இந்தியாவின் செவ்வாய் கிரகப் பயணத்தைப் பிரதிபலிக்கும், விண்கலப் பயணத்தின் முக்கிய நாளில் தான் உடுத்திய அந்தப் புடவையை கேட்டுள்ளார்.

“நந்தினியின் புடவை இந்தியாவின் விண்வெளித் துறை சேகரிப்பில் நாங்கள் சேர்த்துள்ள முதல் இந்தியப் பொருளாகும். அதோடு எங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள முதல் புடவையும் இதுதான்!” என விண்வெளி வரலாற்றுப் பொறுப்பாளர் மேட் ஷிண்டெல் தெரிவித்துள்ளார்.

அருங்காட்சியகத்திற்கு வரும் ஊழியர்கள் யூடியூப் காணொளிகளைப் பார்த்து, அந்தப் புடவையை ஒரு பொம்மைக்கு எவ்வாறு உடுத்துவது என்று கற்றுக்கொண்டு அதைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்கப் பெண்மணியான சாலி ரைட் 1983 விண்கலப் பயணத்தின் போது அணிந்திருந்த புகழ்பெற்ற நீல நிற டி-ஷர்ட்டுக்கு அருகிலேயே நந்தினியின் புடவை வைக்கப்பட்டுள்ளது.

1970 இல் விபத்துக்குள்ளான அப்பல்லோ 13 விண்கலத்தின் விண்வெளி வீரர்களைப் பத்திரமாக பூமிக்குக் கொண்டுவர உதவிய நாசா கட்டுப்பாட்டு மையத் தலைவர் ஜீன் கிரான்ஸ் அணிந்திருந்த ஆடையைப் போலவே, நந்தினியின் புடவையும் விண்வெளி வரலாற்றின் மிக முக்கியத் தருணத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் நலனுக்காகக் கூட்டு சேரத் தயார் – நாமல் ராஜபக்ச

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இரத்தினபுரி – உதாகலகம பகுதியில் மண்சரிவு அபாயம்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதி அபாய டெங்கு வலயங்களாக 538 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் அறிவிப்பு!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சொத்து சேகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட “தொடலங்க பொட்டிக்கு” விளக்கமறியல்

ஆவணி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube