Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

கிளிநொச்சி புதுமுறிப்பு குளத்தில் 27,300 மீன் குஞ்சுகள் விடப்பட்டன!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊற்றுப்புலம் நன்னீர் மீனவர் சங்கத்தின் கீழ் உள்ள புதுமுறிப்பு குளத்தில் 27,300 மீன் குஞ்சுகள் இன்று (05) விடப்பட்டன.

சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மீன் குஞ்சுகள், நன்னீர் மீனவர்களின் உற்பத்தியை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் குளத்தில் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான இறால் வளர்ப்பு திட்டத்தின் கீழ் கடந்த வாரம் சுமார் ஒரு இலட்சம் இறால் குஞ்சுகளும் புதுமுறிப்பு குளத்தில் விடப்பட்டிருந்ததாக மீனவர் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

சமீபத்தில் ஏற்பட்ட டித்வா புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளால் பல நன்னீர் மீன்பிடி குளங்கள் சேதமடைந்ததுடன், மீனவர்களின் படகுகள், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களும் பாதிக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், நன்னீர் மீனவர்களின் உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க விசேட நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை நேரில் கண்டறிந்து, உடனடி தீர்வுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

ஆவணி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முகநூல் மூலம் வாகனங்களை கொள்ளையடிக்கும் கும்பல்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கேகாலை பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி குறித்து விசேட கலந்துரையாடல்

ஆனி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தியப் பெருங்கடல் துறைமுகங்கள் மற்றும் விநியோகச் சங்கிலி மீதான அமெரிக்காவின் பார்வை!

ஆனி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube