Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது!

ஆனி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹொரணை அரச வங்கி கிளை ஒன்றில் மூன்றரை கோடி ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், மற்றையவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், குறித்த வங்கியில் பணியாற்றி வந்த உதவி முகாமையாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில், சந்தேகநபர்கள் இருவரும் இன்று ஹொரணை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, கைதான உதவி முகாமையாளரை 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கு காவல்துறையினருக்கு நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

அதேநேரம், வங்கியின் பாதுகாப்பு அதிகாரியை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர் ஒருவரினால் வங்கியின் ATM இயந்திரத்தில் வைப்பிலிடுவதற்காக எடுத்து வரப்பட்ட 3.5 கோடி ரூபாய் பணத்தைக் கொண்ட இரண்டு பைகளை, இந்த சந்தேகநபர்கள் இருவரும் பலவந்தமாக கொள்ளையிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரண பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் தீ விபத்து!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விமல் வீரவன்ச கைது!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்புத்தேகம நீர் வழங்கல் திட்டம் – மக்கள் பாவனைக்குக் கையளிப்பு

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற வாலிபர் கைது

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube