Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் பலபகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் கனமழை!

ஆனி 7, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் சுமார் 40 முதல் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை தவிர்த்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பிராந்தியங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அந்தப் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்பட வாய்ப்புள்ளதாகவும், கடலில் பயணிக்கும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மறு அறிவித்தல் வெளியாகும் வரை குறித்த கடற்பிராந்தியங்களுக்குள் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்ந்தும் வானிலை அறிவிப்புகளை அவதானித்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

அரசியல் தலையீட்டுடனான ஆட்சேர்ப்புகளுக்கு முடிவு – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெல்லாவெளியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் மீது தாக்குதல் – இரு பொலிசர் படுகாயம்

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு

புரட்டாதி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கை சபைக் கூட்டம் திங்கட்கிழமை!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube