புங்குடுதீவைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நிலையில், அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடல்தொழில் அமைச்சரின் கோரிக்கைக்கு அமைவாக கடற்படையினரும் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதன் பலனாக, காணாமல் போயிருந்த மீனவர்கள் இன்று பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டு குறிகட்டுவான் கரைக்கு அழைத்து வரப்பட்டு பொறுப்பான தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பின்னர், அவர்கள் தங்களது குடும்பத்தினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்ட கடற்படையினருக்கும், மீனவர் சங்கங்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
