Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் மண்சரிவு அபாயம்!

ஆனி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் கொட்டகலை, பத்தனை சந்திக்கு அருகில் உள்ள மண்சரிவு அபாயப் பகுதிக்கு மேலாக உள்ள யூக்கலிப்டஸ் மரங்கள் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, குறித்த பகுதியில் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதான வீதிக்கு ஏற்படக்கூடிய சேதங்களைக் கருத்திற்கொண்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) முதல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு ஏற்பட்டுள்ள மலை உச்சியில் உள்ள சில யூக்கலிப்டஸ் மரங்களின் வேர்கள் தற்போது வெளியில் தெரிவதாகப் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

இப்பகுதியில் தற்போது நிலவும் பலத்த காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக, இந்த மரங்கள் எந்த நேரத்திலும் பிரதான வீதியில் முறிந்து விழக்கூடும் என மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.

அவ்வாறு மரங்கள் முறிந்து விழுந்தால், வீதியில் பயணிக்கும் பயணிகள் மற்றும் வாகனங்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாயகரமான முறையில் காணப்படும் இந்த மரங்களை அகற்றுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை அதற்கு நிரந்தர தீர்வு எதுவும் கிடைக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிள்ளைகளை முதலாம் தரத்தில் சேர்த்துக்கொள்வதற்காக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை – ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி உரிமம் கட்டாயம் – பொலிஸ் எச்சரிக்கை!

ஆனி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகீஸ்வர பண்டார மீண்டும் விளக்கமறியலில்!

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உள்நாட்டு இறைவரி திருத்தச் சட்டமூலத்தில் சபாநாயகர் நேற்று கையொப்பமிட்டார்!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube