Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

களுத்துறை துப்பாக்கிச் சூடு; மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கடந்த மே மாதம் 28ஆம் திகதி காலை, களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டுமாகடை பள்ளிவாசல் வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, நேற்று (07) வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வலகெதர பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தின் போது கார் ஒன்றில் வந்த குழுவினர், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை சுட்டுக்கொலை செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர் ஹம்பாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளில், மத்துகம, களுத்துறை, திஸ்ஸமஹாராம, வலஸ்முல்ல மற்றும் மொரவக்க நீதவான் நீதிமன்றங்களால் இவருக்கு எதிராக பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் ஆசிரியர்கள் போராட்டம்!

ஆனி 11, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான வீதியில் மண்சரிவு!

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கம்பளையில் வீதியில் தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சம்பந்தனுக்கு கிழக்கில் சிலை வைக்க அனுமதியோம் – ஈழத்தமிழர் முன்னணி கட்சியின் தலைவர் ஜெயா சரவணன்–

ஆடி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube