Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எபோலா வைரஸ் பரவல்! சுகாதார அமைச்சு எச்சரிக்கை !

வைகாசி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்க நாடுகளில் பரவி வரும் எபோலா (Ebola) வைரஸ் உலகளாவிய ரீதியில் சுகாதார அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையிலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன மற்றும் தொற்றுநோய் விபரவியல் நிபுணர் மருத்துவர் மஹேஷாக விஜயவர்தன ஆகியோர் தெரிவிக்கையில்,

இலங்கைக்குள் இந்நோய் நுழைவதைத் தடுப்பதற்காகச் சுகாதார அமைச்சு 5 கட்டத் தயார்நிலைத் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தியுள்ளது.

வானூர்தி நிலையங்கள் மற்றும் சர்வதேச நுழைவாயில்களில் கண்காணிப்பை பலப்படுத்துதல்.

சந்தேகத்திற்கிடமான நோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அங்கொடை தேசிய தொற்றுநோய் அறிவியல் நிறுவனத்தை தயார் நிலையில் வைத்திருத்தல்.

ஆய்வகப் பரிசோதனைகள் மற்றும் நோய் நிர்ணயப் பணிகளுக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தை தயார் படுத்துதல்.

நாடளாவிய ரீதியில் நோய் கண்காணிப்பு கட்டமைப்பை மேம்படுத்துதல்.

உலகளாவிய நிலைமைகளைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பதற்காகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவும் உலக சுகாதார நிறுவனமும் இணைந்து நெருக்கமாகச் செயலாற்றுதல்.

இலங்கையில் இதுவரை எந்தவொரு எபோலா நோயாளரும் அடையாளம் காணப்படவில்லை என்றும், இந்நோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

80 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 40 பேர் பலி!

ஆடி 3, 2026
இலங்கைவானிலை

பல மாகாணங்களில் பலத்த காற்று; இடைக்கிடை மழைக்கு வாய்ப்பு

ஆடி 3, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

விஜயை பார்த்தா பொறாமையா இருக்கு…

வைகாசி 26, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தலவாக்கலை – பூண்டுலோயா வீதியில் மரம் வீழ்ந்து போக்குவரத்து தடை!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube