Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தாய், கள்ளக்காதலனுக்கு விளக்கமறியல்!

ஆனி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தனது மகளை கள்ளக்காதலனுடன் இணைந்து பாலியல் துஷ்பிரயோகயம் செய்த தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

சம்பவம் நடந்து மூன்று மாத காலமாக தலைமறைவாகியிருந்த சந்தேக நபர் மற்றும் சிறுமியின் தாய் ஆகியோர் கைது செய்யப்பட்டு கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, இருவரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் (IMO /WHATSAPP) ஊடாக தம்புள்ளை கலேவலை பகுதியைச் சேர்ந்த, திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு 18 வயது ஆண்பிள்ளை மற்றும் 14 வயது பெண்பிள்ளை என 2 பிள்ளைகள்.

குறித்த பெண் சந்தேக நபரை சந்திக்க, தனது 14 வயது மகளை தன்னுடன் அழைத்துக்கொண்டு நற்பிட்டிமுனைக்கு சென்றுள்ளார். அங்கு தாயும் பிள்ளையும் தங்குவதற்காக வாடகைக்கு வீடொன்றினை கிராம சேவகரின் உதவியால் பெற்று, அங்கு தங்கியிருந்துள்ளனர்.

அந்த வாடகை வீட்டில் தங்கியிருந்த போதே தாய் மற்றும் சிறுமி ஆகிய இருவருடனும் சந்தேக நபர் தகாத உறவு கொண்டதாகவும், தாயின் ஒத்துழைப்போடு சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய செயற்பட்ட பொலிஸார், தலைமறைவாகியிருந்த சந்தேக நபரை, சுமார் 3 மாதங்களின் பின்னர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள ஆலங்குளம் பகுதியில் கடந்த 3ஆம் திகதி கைது செய்துள்ளனர்.

பின்னர், தொடர் விசாரணை நடத்தப்பட்டு பிரதான சந்தேக நபர் மற்றும் சிறுமியின் தாய் ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வெளிமாவட்டத்தில் உள்ள பாதுகாப்பான சிறுவர் நன்னடத்தை நிலையம் ஒன்றில் வைத்திய பரிசோதனைக்காக தங்க வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முதல் BESS உபகரணம் கிளிநொச்சி வந்தது!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மையினை தெளித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய வெற்றி தினம் நாளை!

வைகாசி 18, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அயோத்திதாசர் பண்டிதரின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் விஜய் மரியாதை

வைகாசி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube