கடந்த வார இறுதியில் காசா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் இரண்டு பாலஸ்தீன போராளிகளைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இவர்கள் கடந்த 2023 ஒக்டோபர் 7ஆம் திகதி ‘கிப்புட்ஸ் பேரி’ (Kibbutz Be’eri) மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பங்கெடுத்தவர்கள் என்றும் இஸ்ரேல் இராணுவம் உரிமை கோரியுள்ளது.
கொல்லப்பட்டவர்கள் ஹமாஸ் அமைப்பின் பிலாடூன் (Platoon) தளபதி முகமது சயீத் அகமது நிம்ரோதி (Mohammed Saeed Ahmed Nimroti) மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) அமைப்பின் மத்திய முகாம் விசேட படையணியின் பிலாடூன் தளபதி முஆவியா சுலைமான் ஜக்கார் அய்தி (Muawiya Sulaiman Zakar Aydi) என இஸ்ரேல் இராணுவத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும், இந்தச் சம்பவம் குறித்து ஹமாஸ் அல்லது பாலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் அமைப்புகளிடமிருந்து உடனடியாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
