Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: சுரேஸ் சலே மீது கடும் குற்றச்சாட்டு!

ஆனி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு மூன்று வாரங்களுக்கு முன்னர், முன்னாள் புலனாய்வு அதிகாரியான சுரேஸ் சலே, நீர்கொழும்பு பகுதிக்கு ஐந்து பேரை அனுப்பி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் விசேட ஆராதனைகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை சேகரிக்கச் செய்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகளுடன் சுரேஸ் சலே நேரடி தொடர்பில் இருந்ததுடன், தாக்குதலுக்குத் தேவையான உதவி மற்றும் ஒத்துழைப்புகளையும் வழங்கியுள்ளதாக அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் போது கிடைத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கண்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால சபையில் மேலும் தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நான் ஜனாதிபதியை விரட்டினேன் என்று என்னை மக்கள் தப்பாக நினைக்க வேண்டாம் – கஸ்ஸப்ப தேரர்!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இரத்தினபுரி – உதாகலகம பகுதியில் மண்சரிவு அபாயம்!

வைகாசி 23, 2026
இலங்கை

துப்பாக்கி மிரட்டல் விடுத்ததற்காக யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கைது

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற 14 சீன பிரஜைகள் கைது!

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube