ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளின் கீழ் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வாவை, ஜூன் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு, 16.5 மில்லியன் ரூபாய் தென் மாகாண சபை உறுப்பினர் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பொதுத் தன்னார்வ அமைப்புகளுக்கு நாற்காலிகள் வழங்கும் திட்டத்தில் முறையான கொள்முதல் நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதன்படி, தயாரிப்பு நிறுவனம் ஒன்றிற்கு முறைகேடாக சலுகை வழங்கியதுடன், தென் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 54 மாகாண சபை உறுப்பினர்களின் அலுவலகங்களுக்கு 16,361 நாற்காலிகள் விநியோகிக்கப்பட்டதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்பட்டதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.
