Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப் பொருள் பாவனையுடன் பேருந்து செலுத்திய 4 சாரதிகள் கைது!

ஆனி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

போதைப்பொருள் பாவனையுடன் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு சாரதிகள் மற்றும் இரண்டு நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனையில் பேருந்துகளைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களைக் கண்டறியும் விசேட முற்றுகை நடவடிக்கை ஒன்று ஹொரண பிரதான பேருந்து நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹொரண, இங்கிரிய, மொரகஹஹேன மற்றும் அக்குருவாதொட்ட ஆகிய காவல்துறை நிலையங்களின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளும், தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவன அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இதன்போது, ஹொரண நகரில் இருந்து சேவையில் ஈடுபடும் மற்றும் நகரூடாகச் செல்லும் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் என மொத்தம் 151 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அவர்களில் போதைப்பொருள் பாவனையில் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த சாரதிகள் செலுத்தி வந்த நான்கு பேருந்துகளும் காவலில் எடுக்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில், கைது செய்யப்பட்டவர்கள் 34 முதல் 61 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அவர்கள் குடாவோடுப, பெல்லபிட்டிய, கலுகஹஹின்ன, கோவின்ன மற்றும் எகொடைஹேன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

முகநூல் களியாட்ட விருந்துகள் நடைபெறும் இடங்களை கண்காணிக்க விசேட நடவடிக்கை

புரட்டாதி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையில் திருத்தம் வேண்டாம் என கோரிக்கை!

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கான கொரியத் தூதுவர் ஜனாதிபதியின் செயலாளரை சந்திப்பு

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் பாலியல் ரீதியான அநீதிகளுக்கு நீதிகோரி மன்னாரில் போராட்டம்!

வைகாசி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube