Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல் : கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

ஆனி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொட்டக்கலை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இன்று புதன்கிழமை இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகளை அந்தக் குழுவினர் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

கொட்டக்கலை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தலவாக்கலை வட்டக்கொட பகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் குழு ஒன்று திருமண விழாவில் இன்று மாலை சுமார் 4:00 மணியளவில் திருமண விழாவிற்கு வந்திருந்த மதுபோதையில் இருந்த இரு குழுக்களுக்கு இடையே மோதல் இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து மோதலை அமைதிப்படுத்தச் சென்ற பணியில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளை இரு குழுக்களாலும் தாக்கப்பட்டு காயமடைந்தனர்.

இதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு மேலும் திம்புள்ளபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று அங்கு வந்தபோது, ​​அதிகாரிகளும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சிக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்டதைக் நேரடியாக கண்ட பிரதேசவாசிகள் தாக்குதலில் ஈடுபட்ட மேலும் தாக்கிய சந்தேக நபர்களைக் கைது செய்ய உதவி செய்துள்ளனர் .

கடுமையாக மோதலில் ஈடுபட்ட மூன்று பேரும், தாக்கப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கொட்டக்கலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொட்டகலை நகரில் நடந்த மோதலைத் தொடர்ந்து அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது மேலும் குறித்த மோதலை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பிற்காகவும் தலவாக்கலை, லிந்துலை மற்றும் நானுஓயா காவல் நிலையங்களிலிருந்து கூடுதல் பொலிஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் தொடர் குடியிருப்பின் மீது லொரி ஒன்று மோதி விபத்து!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகப்படியான புகையை வெளியிடும் வாகனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படும்!

வைகாசி 7, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

உத்தரபிரதேசத்தில் தீ விபத்து – உயிரிழப்புகள் இல்லை!

சித்திரை 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை பாடசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனை குழாய் வெடித்ததில் 4 மாணவிகள் காயம்!

ஆனி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube