Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய மற்றும் சப்ரகமுவ பாடசாலை மாணவர்களுக்கு கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்கிவைப்பு!

ஆனி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட கஷ்ட பிரதேச பாடசாலைகளுக்கு கணனி மற்றும் தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் நேற்று (18) வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

அனைத்துலக மருத்துவ நல அமைப்பினால் (IMHO) தெரிவுசெயப்பட்ட 10 பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு கணினிகள் வழங்கும் நிகழ்வு நேற்று (18) மஸ்கெலியாவில் இடம்பெற்றது.

திருமதி. வைஷ்ணவி மற்றும் திரு. நிதிஷ் சிவா ஆகியோரின் பூரண அனுசரணையுடன் ஹட்டன், நுவரெலியா, நிவித்திகல, இரத்தினபுரி மற்றும் எம்பிலிப்பிட்டிய கல்வி வலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலைகளுக்கு மொத்தமாக 50 கணினிகள் உட்பட கணினி மேசைகள் மற்றும் கதிரைகள் வழங்கிவைக்கப்பட்டன.

IMHO நிறுவனத்தின் திட்டப் பணிப்பாளர் திரு.கந்தையா விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுமதி அவர்கள் கலந்துகொண்டதுடன், கௌரவ அதிதியாக ஹட்டன் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சர்மா அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

மேலும், IMHO நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், பயனடைந்த பாடசாலைகளின் அதிபர்கள், தகவல் தொழில்நுட்ப பாட ஆசிரியர்கள் மற்றும் சில பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களின் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தி, நவீன டிஜிட்டல் கற்றல் வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம், நவீன கல்வி வாய்ப்புகளும் வளங்களும் குறைவாக உள்ள சமூகங்களின் கல்வி முன்னேற்றத்திற்கு வழிசமைப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் இருந்து யாசகர்கள் வௌியேற்றம்!

ஆடி 10, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

நடிகர் தனுஷின் அரசியல் பிரவேசம் – ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட்

ஆடி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாணவர்களுக்கு கஞ்சா கலந்த போதைப்பொருள் விற்பனை: இளைஞர் கைது!

ஆவணி 12, 2026
இலங்கை

ஷான் விஜயலால் டி சில்வா பிணையில் விடுதலை!

ஆனி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube