Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகள்!

Social Media | Children's | SriLanka | QuickTamilNews

வைகாசி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாடளாவிய ரீதியில் சமூக வலைதள பாவனை, இலத்திரனியல் சாதனங்களின் பயன்பாடு சிறுவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சிறுவர்கள் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக ஊடகங்களை மேற்பார்வையின்றிப் பயன்படுத்துவதால் ஏற்படும் அடிமையாதல் மற்றும் நடத்தை ரீதியான சிக்கல்களைத் தடுக்கும் நோக்கில், புதிய கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

சிறுவர்களின் கைத்தொலைபேசி பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது மற்றும் சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகள் தற்போது தீவிரமாக கலந்து ஆலோசித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் சூழலில் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான கொள்கைப் பரிந்துரைகளை உருவாக்குவதற்காக, பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் விசேட ஆலோசனைக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

05 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைத்தொலைபேசி மற்றும் டேப்லெட் போன்ற டிஜிட்டல் திரைகளைப் பயன்படுத்துவதை முழுமையாகத் தடை செய்தல், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகப் பயன்பாடுகளை முற்றாகத் தடை செய்தல் ஆகியவை பரிசீலனையில் உள்ள முன்மொழிவுகளில் அடங்குகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டின் எந்தவொரு பிரச்சினைக்கும் எதிர்க்கட்சியின் தீர்வு நம்பிக்கையில்லா பிரேரணை!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சாலேவின் குடும்பத்தினரை பின் தொடரும் மர்மநபர்!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயர்தரப் பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியீடு!

ஆடி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்

பெல்வத்தை கரும்புச் செய்கை நிலத்தில் பயங்கர தீ விபத்து!

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube