Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரபல பாடசாலையில் மாணவி வன்புனர்வு; சம்பவத்தை மூடி மறைத்த அதிபர், உப அதிபர்

School Abuse Case Student Assault Investigation School Incident Principal Under Investigation Vice Principal Investigation Child Protection Student Safety Education News

ஆனி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அம்பலாந்தோட்டை பகுதியில் உள்ள தேசியப் பாடசாலையொன்றில், 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் அதே பாடசாலை வளாகத்தில் வைத்து மற்றொரு பாடசாலை மாணவனால் பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தை மறைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில், குறித்த பாடசாலையின் அதிபர், உப அதிபர் மற்றும் சந்தேகத்திற்குரிய மாணவன் ஆகியோர் இன்று (ஜூன் 19) கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மே மாதம் 21-ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த தினமொன்றில், பாடசாலையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியின் போது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக வேறு பாடசாலையிலிருந்து வந்த 15 வயதுடைய மாணவன், பாடசாலைக் கட்டிடங்களுக்கு இடையே மறைவாக இருந்த இடத்தில் வைத்து, மாணவியை பாரதூரமான முறையில் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்குப் முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்ட அறிவுறுத்தலுக்கு அமைய, அம்பலாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்து, மேற்படி மூவரையும் கைது செய்துள்ளதாக அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் தலைமைப் பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் அமில ராஜபக்ஷ தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மீற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்டப் பாடசாலைகள் குறித்து விசேட கலந்துரையாடல்!

ஆனி 9, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அண்ணாமலையை தொடர்ந்து புதிய இயக்கத்தை ஆரம்பித்த சுப்பர் ஸ்டாரின் மனைவி!

ஆனி 6, 2026
இலங்கை

டெங்கு நோயாளர்கள் 35,000ஐ தாண்டி மரணங்கள் 20 ஆக உயர்வு!

ஆனி 5, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணையில் அரசியல் தலையீடு வேண்டாம்: அருட்தந்தை சிரில் காமினி!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube