மேற்கிந்தியத் தீவுகள் தெரிவு அணிக்கு எதிரான பயிற்சி போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் பெற்று, வெறும் 32 ஓட்டங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.
முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் தெரிவு அணியை 205 ஓட்டங்களுக்கு சுருட்டிய இலங்கை அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிசான் மதுஷ்கா 49 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்து சிறந்த தொடக்கத்தை வழங்கினார். அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா 34 ஓட்டங்கள் பெற்றார்.
அனுபவ வீரர் தினேஷ் சந்திமால் ஆட்டமிழக்காமல் 54 ஓட்டங்களுடன் களத்தில் நிலைத்து நின்று இன்னிங்சை வழிநடத்தினார்.
மேற்கிந்தியத் தீவுகள் தெரிவு அணிக்காக மெக்கென்சி அதிகபட்சமாக 58 ஓட்டங்கள் எடுத்ததுடன், கேவின் விக்கம் 20 ஓட்டங்கள் பெற்றார்.
பந்துவீச்சில் லஹிரு குமார 39 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாம் நாள் ஆட்ட நிறைவில் தினேஷ் சந்திமால் (54*) மற்றும் தினுஷா (5*) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முதல் இன்னிங்சில் முன்னிலை பெறும் நோக்கில் இலங்கை அணி மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.
