Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பசுமை ஆற்றல் கொள்கைக்கு அதரவளிக்கும் அபிவிருத்தித் திட்டம்…

#GreenEnergy #RenewableEnergy #SustainableDevelopment #CleanEnergy #ClimateAction #SriLanka #Development #EnergyPolicy #Environment #EcoFriendly #TamilNews #NewsUpdate #BreakingNews #Sustainability #FutureEnergy

ஆடி 22, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இலங்கையின் முதலாவது கால்வாய் வழியாக  சூரிய சக்தித்  திட்டத்தை ஆரம்பிப்பதற்கான  சாத்தியக்கூறுகள் பற்றிய  ஆய்வு ஒன்று, மஹியங்கனையில் உள்ள வியாணா கால்வாயை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டுவருகிறது.

விவசாயத்திற்கு  நீரை மட்டும்  கொண்டு செல்லும் ஒரு கால்வாயாக மட்டுமன்றி, மின் உற்பத்தி, நீர் வளங்கள் மற்றும் காட்டு யானை பாதுகாப்பு என்பவற்றிற்கு பங்களிக்கும் வகையில் பசுமை ஆற்றல் கொள்கைக்கு அதரவளிக்கும் அபிவிருத்தித் திட்டமாக மஹியங்கனை வியன்னா ஓயா வாய்கால் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது.

வருடத்தில் பெரும்பாலான காலங்களில்  கிடைக்கும் பொருத்தமான  சூரிய ஒளி  இத்திட்டத்திற்காக பாரிய பங்களிப்பு செய்யும் என்பதால் இக் கால்வாய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

20 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளத்தைக் கொண்ட பரந்த கால்வாயாக இது இருப்பதன் மூலம் தேசிய மின் தொகுப்பில் பெருமளவிலான புதுப்பிக்கத்தக்க ஆற்றலைச் சேர்க்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சூரிய மின்தகடுகள் (சோலா் பெனல்ஸ்) மூலம் கால்வாயை மூடிஅதன் மூலம் நீர் ஆவியாவதைக் கட்டுப்படுத்தவும், கடும் வெப்பமான காலநிலையின் போது நீரின் வெப்பநிலையை தகுந்த மட்டத்தில் பேணுவதற்கும் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காட்டு யானைகள் அடிக்கடி  கால்வாய்க்குள் விமும் நிகழ்வுகள்  இடம் பெறுகின்றன.   இத்திட்டத்தில் பாதுகாப்பான ‘மின்சார – யானை வேலிகளும்’  அடங்குவதால், கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயத்தையும் குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டம் வெறும் நீரைக் கொண்டு செல்லும் ஒரு கால்வாயாக மட்டுமன்றி,  மின்சாரத்தை உற்பத்தி செய்யும், நீர் வளங்கள் மற்றும் காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்குப் பங்களிக்கும், இலங்கையின் பசுமை ஆற்றல் கொள்கைக்கு ஒரு புதிய உத்வேகத்தைக்  கொடுக்கும்  மாதிரி அபிவிருத்தித் திட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதத் பலகல்ல மற்றும் மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் அழககோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கை நிலையான சக்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் விஜேந்திர பண்டார, பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் ரோஹண ரம்பொடகே, இலங்கை மின்சார விநியோக நிறுவனத்தின் திட்டமிடல் பொறியியலாளர் அசித அத்தநாயக்க உள்ளிட்ட இலங்கை மகாவலி அதிகாரசபையின் சிரேஷ்ட பொறியியல் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

சட்டப் பாதுகாப்புகள் அனைவருக்கும் சமம்– சாலிய பீரிஸ் வலியுறுத்தல்!

ஆனி 8, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!

ஆனி 11, 2026
இலங்கை

அதிக விலைக்கு அரிசி ,குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

சித்திரை 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் – ஜேவிபி-யின் பொதுச் செயலாளர் சந்திப்பு!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube