Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு- உயர்தரத்திற்கு 225,748 பேர் தகுதி!

ஆனி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், 225,748 மாணவர்கள் உயர்தரக் கல்வியைத் தொடரத் தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார்.

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டது.

பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் 11,790 பேர் அனைத்து பாடங்களிலும் ‘A’ தரச் சித்திகளைப் பெற்று சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களின் தேர்ச்சி வீதங்களில் முன்னேற்றம் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு 69.07 சதவீதமாக இருந்த விஞ்ஞானப் பாடத் தேர்ச்சி வீதம், இம்முறை 70.1 சதவீதமாக உயர்ந்துள்ளதுடன், கணிதப் பாடத் தேர்ச்சி வீதமும் 71.06 சதவீதத்திலிருந்து 72.03 சதவீதமாக அதிகரித்துள்ளது.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, விஞ்ஞானம் மற்றும் கணிதப் பாடங்களில் மாணவர்கள் பெற்றுள்ள பெறுபேறுகள் சாதகமான வளர்ச்சியை வெளிப்படுத்துவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மாலபே சட்டவிரோத மதுபான ஆலை: இந்தியாவில் இருந்து போலி ஸ்டிக்கர்கள்!

ஆடி 9, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் பலி

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நோர்வூட் அஸ்வெசும மோசடி: இருவரின் விளக்கமறியல் நீடிப்பு

ஆவணி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 620 மில்லியன் ரூபா பெறுமதியான அதி நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube