Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் உணவகம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு நகரில் பிரபலமான உணவகம் ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இலச்சத்து 77 ஆயிரம் ரூபா மோட்டார் சைக்கிள் ஒன்றை நேற்று சனிக்கிழமை (20)  பிற்பகல் 1.00 மணிக்கு திருடிச் சென்ற ஒருவரை CCTV கமராவின் உதவியுடன்  5 மணித்தியாலயத்தில் கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த உணவகத்தில் கடமையாற்றும் முகாமையாளர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை சம்பவ தினமான நேற்று(20) உணவகத்தின் முன்னால் உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு கடமையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர் மதிய வேளையில் மோட்டார் சைக்கிளை பார்த்தபோது  திருட்டு போயுள்ளது தெரிய வந்துள்ளதையடுத்து பொலிசாருக்கு தெரியப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி கஜநாயக்க தலைமையில் பொலிஸ் சாஜன் இலகமே, ரகுமான் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் உணவகத்தில் உள்ள CCTV கமராவில் பதிவாகியுள்ள திருடனை அடையாளம் கண்டு கொண்ட பொலிசார் குறித்த திருடனை மாலை 6.00 மணியளவில் கைது செய்ததுடன் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளையும் மீட்டனர்.

குறித்த திருடன் நகரில் சைக்கிள்களை திருடி வந்துள்ளதாகவும் ஏற்கனவே பல முன் குற்றம் கொண்டவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாளை 12 மணித்தியால நீர்வெட்டு

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து – சாரதி படுகாயம்!

ஆனி 16, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புதுக்குடியிருப்பு மத்தியக்கல்லூரி நிர்வாகத்தின் அசமந்தப் போக்கால் பாதிப்புக்குள்ளாகும் மாணவர்கள்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அரசியலாக்கப்படுகிறது. என நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு!

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube