Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்குவதற்கான புதிய சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

அக்டோபர் 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்கான புதிய சட்டமூலம், பாராளுமன்றத்தில் இன்று முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடியபோது, “பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்” என்ற பெயரில் இந்த சட்டமூலத்தை சபையில் சமர்ப்பித்தார்.

இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கம், இலங்கைக்குள்ளும் இலங்கைக்கு வெளியிலும் இடம்பெறும் பயங்கரவாதச் செயல்கள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்களிலிருந்து தேசிய பாதுகாப்பையும் இலங்கை மக்களையும் பாதுகாப்பதாகும்.

அத்துடன், இலங்கையின் ஆள்புலத்தைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தயாராகும் செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் இந்த சட்டமூலத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களை கண்டறிதல், அடையாளம் காணுதல், கைது செய்தல், தடுத்து வைத்தல், விசாரணை செய்தல், வழக்குத் தொடருதல் மற்றும் தண்டனை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கான சட்ட ஏற்பாடுகளையும் புதிய சட்டமூலம் உள்ளடக்கியுள்ளது.

மேலும், தற்போது நடைமுறையில் உள்ள 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை நீக்குவதற்கும், அதனுடன் தொடர்புடைய இடைக்கால மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் இந்த புதிய சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டமூலத்தின் உள்ளடக்கத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகம் சபையில் வாசித்ததைத் தொடர்ந்து, அது முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட்டது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சஷி வீரவன்சவின் மேன்முறையீடு நவம்பர் 18ஆம் திகதி பரிசீலனை!

அக்டோபர் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

அக்டோபர் 18, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது பாகிஸ்தான் – மூன்றாவது போட்டி இன்று

அக்டோபர் 13, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

இம்ரான் கானின் உடல்நலம் குறித்து பாகிஸ்தான் பிரதமருக்கு கடிதம்

ஆகஸ்ட் 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube