Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சாலேவின் குடும்பத்தினரை பின் தொடரும் மர்மநபர்!

ஆனி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரச் சபையின் தலைவருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தனது கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் தொடர்புடையவர் எனத் தோன்றும் சிவில் உடையில் இருந்த நபர் ஒருவர், தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, அந்த நபர் தனது மகன் மற்றும் மகளைத் தொடர்ந்து பின்தொடர்வதோடு, அவர்களின் படங்கள் மற்றும் காணொளிகளை எடுக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவங்கள் காரணமாகத் தானும் தனது பிள்ளைகளும் பெரும் அச்சத்துக்கும், கடுமையான மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மனோரி சலே, இது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தலையிட்டு முறையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, சுரேஷ் சலே தொடர்பில் ‘உலகளாவிய இலங்கை மன்றம்’ ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

குறித்த கடிதத்தில் சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ளமை மற்றும் அவரது சுகாதார நிலைமை குறித்து உடனடியாகவும் அவசரமாகவும் கவனம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorizedஇலங்கைமுக்கியச் செய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் பெருவிழா!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவாசல ரயில் விபத்துக்கு காரணமான சந்தேக நபரின் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் கைது!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு விமானப்படை முகாமின் முன்னால் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வாவியில் வீழ்ந்ததில் 20 வயது இளைஞன் உயிரிழப்பு

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube