Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் கைது!

Immigration | Technical officer | Arrested | Srilanka | QuickTamilNews

வைகாசி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாட்டாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று (14) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

மென்பொருள் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்குவதாகக் கூறி, அரசாங்க நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, திணைக்களத்தில் புதிய மென்பொருள் கட்டமைப்பு ஒன்றினைச் செயல்படுத்துவதற்காக 9.8 மில்லியன் ரூபாவிற்கும் அதிகப்படியான நிதி செலவிடப்பட்டதாக சந்தேகநபர் எழுத்துப்பூர்வமான பிரகடனம் ஒன்றைச் சமர்ப்பித்திருந்துள்ளார்.

எனினும், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அத்தகைய மென்பொருள் கட்டமைப்பு எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும், போலியான ஆவணங்கள் மூலம் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களை இழைத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலேயே இந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. இந்த ஊழல் விவகாரத்தில் வேறு அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதா என்பது தொடர்பில் சி.ஐ.டியினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

கண்டியில் மண் மேடு சரிந்து விபத்து: கட்டுமான தொழிலாளி உயிரிழப்பு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பானங்களுக்கான சர்க்கரை அளவு வண்ணக் குறியீட்டு விதிமுறைகளில் திருத்தம்

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவை நோக்கி கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

HIV தடுப்பு பலப்படுத்தல்!

ஆனி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube