Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

WhatsApp நிறுவனத்தின் தலைவர் பதவி விலகல்!

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

WhatsApp நிறுவனத்தின் தலைவர் வில் கேத்கார்ட் (Will Cathcart) தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளாக WhatsApp தளத்தை வழிநடத்தி, உலகளவில் அதன் பயனர்களின் எண்ணிக்கையை 300 கோடிக்கும் மேலாக உயர்த்திய பெருமை இவருக்கு உண்டு.

WhatsApp தற்போது மிக வலுவான நிலையில் உள்ளதால், இதிலிருந்து விலகுவதற்கு இதுவே சரியான தருணம் என அவர் தெரிவித்துள்ளார்.

வில் கேத்கார்ட் விலகலையடுத்தது, இந்திய நிதித் தொழில்நுட்ப (Fintech) நிறுவனமான ‘கிரெட்’ (Cred)-இன் நிறுவனர் குணால் ஷா (Kunal Shah) WhatsApp செயலியின் புதிய தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.

இது குறித்து மெட்டா (Meta) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸுகபேர்க் கூறுகையில், “இந்தியாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றை குணால் ஷா உருவாக்கியுள்ளார்.

உலகின் மிகப்பெரிய செய்திப் பரிமாற்ற செயலியை வழிநடத்துவதற்கு அவரது உலகளாவிய பார்வையும், புதியவற்றை உருவாக்கும் சிந்தனையும் பெரிதும் உதவும்” எனப் பாராட்டியுள்ளார்.

பெங்களூரைத் தளமாகக் கொண்ட ‘கிரெட்’ நிறுவனத்தில் மெட்டா நிறுவனம் 900 மில்லியன் டொலர்களை முதலீடு செய்து, அதன் 20 சதவீதப் பங்குகளைப் பெறவுள்ளதாகவும், எனினும் பயனர்களின் தரவுகளுக்கு மெட்டா நிறுவனத்திற்கு அனுமதி இருக்காது என்றும் குணால் ஷா தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்தியாவில் மட்டும் சுமார் 85 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள WhatsApp நிறுவனம், விளம்பரங்கள், கட்டணச் சேவைகள் மற்றும் AI கருவிகள் மூலம் தனது வருவாயைப் பெருக்கத் திட்டமிட்டு வரும் நிலையில், இந்த தலைமை மாற்றம் மெட்டா நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“டுபாய் சுதா”விடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டீர்களா? உடனே இந்த இலக்கத்திற்கு அழையுங்கள்!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அடுத்த ஜனாதிபதி திலித் ஜயவீரவே – அம்பிட்டிய சுமணரத்ன தேரர்!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

“குஷ்” போதைப்பொருளுடன் ஒருவர் கைது

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube