ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் நிறைவடைந்துள்ளதாக மத்தியஸ்த நாடுகளான பாகிஸ்தான் மற்றும் கத்தார் தெரிவித்துள்ளன.
போர் நிறுத்தம், ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக சர்வதேச கப்பல் போக்குவரத்தை மீளத் திறத்தல் உள்ளிட்ட 14 அம்சங்களை உள்ளடக்கிய தற்காலிக அமைதி ஒப்பந்தத்தில் இரு தரப்பும் இணக்கம் கண்டுள்ளன.
நிரந்தர ஒப்பந்தத்தை எட்டுவதற்கான மீதமுள்ள விவகாரங்களை 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ஈரானின் எண்ணெய் உற்பத்தி, விற்பனை மற்றும் போக்குவரத்து தொடர்பான சில பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்கா தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது. இந்த அனுமதி ஆகஸ்ட் 21 வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
