Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள விசேட அமைச்சரவை உபகுழு

#ElNino #ClimateChange #SriLanka #CabinetSubCommittee #WeatherAlert #DisasterPreparedness #FoodSecurity #Agriculture #ClimateResilience #AnuraKumaraDissanayake #SriLankaNews #BreakingNews #EnvironmentalProtection #NaturalDisasters #ClimateAction

ஆனி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள எல் நினோ (El Niño) காலநிலை நிலைமையினால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்து, தேசிய மட்டத்திலான விசேட செயல்முறைத் திட்டம் ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, அரச நிறுவனங்கள், உள்ளூராட்சி மன்றங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சமூக அமைப்புகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை மேற்கொண்டு இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக, அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த விசேட குழுவிற்காக பின்வரும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்:

  • சுற்றாடல் அமைச்சர்: தம்மிக்க படபெந்தி
  • விவசாய, கால்நடை வளர்ப்பு, காணிகள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர்: லால் காந்த
  • பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர்: சமந்த வித்யாரத்ன
  • துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர்: அநுர கருணாதிலக
  • வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்: வசந்த சமரசிங்க
  • வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்: வைத்தியர் சுசில் ரணசிங்க

மேலும், இந்த அமைச்சரவை உபகுழுவிற்குத் தேவையான ஆதரவையும் ஆலோசனைகளையும் வழங்குவதற்காக அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது!

ஆனி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

வைகாசி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கென்யா விடுதிப் பாடசாலையில் பயங்கர தீவிபத்து – 16 மாணவிகள் பலி!

வைகாசி 28, 2026
இலங்கைஉலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பல வருடங்களின் பின்னர் நிகழும் “ப்ளூ மூன்” – இன்று நாட்டின் எந்தவொரு பகுதியிலிருந்தும் பார்வையிடலாம்!

வைகாசி 31, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube