Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஓட்டுநர் பயிற்றுவிப்பாளர்களுக்கு பயிற்சி உரிமம் கட்டாயம் – பொலிஸ் எச்சரிக்கை!

ஆனி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வாகன ஓட்டுநர் பாடசாலைகளில் பயிற்சி வழங்கும் பயிற்றுவிப்பாளர்கள் கட்டாயமாக செல்லுபடியாகும் ஓட்டுநர் பயிற்சி உரிமம் (Training License) பெற்றிருக்க வேண்டும் என இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

அத்தகைய அனுமதிப்பத்திரம் இன்றி பயிற்சி வழங்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

பல ஓட்டுநர் பாடசாலைகள் உரிய அனுமதிப்பத்திரங்களை வைத்திருந்தாலும், நடைமுறையில் தகுதிச் சான்று இல்லாத நபர்களே பயிற்சிகளை நடத்தும் நிலை காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“ஓட்டுநர் பயிற்சி வழங்கும் ஒவ்வொருவரும் பயிற்சி உரிமம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

முறையான பயிற்சி இன்றி ஓட்டுநர் உரிமம் பெறும் இளைஞர்கள் சாலை விபத்துகளில் அதிகமாக தொடர்புபடுகின்றனர் என்றும், வேகக் கட்டுப்பாடு, போக்குவரத்து விதிகள் மற்றும் சாலை அடையாளங்களைப் பின்பற்றுவதில் காணப்படும் குறைபாடுகளே இதற்குக் காரணமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஓட்டுநர் உரிமம் வழங்கும் நடைமுறைகள் தொடர்பாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், அங்கீகரிக்கப்பட்ட பயிற்றுவிப்பாளர்களுக்கு மட்டுமே பயிற்சி வழங்க அனுமதி வழங்கும் வகையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் நீர்ப்பெருக்கு அதிகரிப்பு!

ஆனி 25, 2026
இந்தியாஇலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறையில் இந்திய கைதி உயிரிழப்பு!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

கடல் கொந்தளிப்பாக காணப்படும் – கடற்றொழிலாளர்கள் அவதானம்

புரட்டாதி 4, 2026
இலங்கைவிளையாட்டு

யாழ். கிங்ஸ் அணியின் உரிமையாளர் கைது!

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube