இருபதுக்கு 20 மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் அயர்லாந்து மகளிர் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை மகளிர் அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக காபி லூயிஸ் 59 ஓட்டங்கள் குவித்தார்.
பந்துவீச்சில் இலங்கை அணிக்காக சுகந்திகா குமாரி, சமரி அதபத்து மற்றும் நிலக்ஷி டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.
131 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலடி கொடுத்த இலங்கை அணி, 15.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை உறுதிப்படுத்தியது.
இலங்கை அணியின் தலைவர் சமரி அதபத்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, 61 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 106 ஓட்டங்கள் பெற்றார். அவரது இன்னிங்ஸில் 17 பவுண்டரிகளும் 2 சிக்ஸர்களும் அடங்கியிருந்தன.
இந்த போட்டியின் ஆட்டநாயகியாக சமரி அதபத்து தெரிவுசெய்யப்பட்டார்.
