Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமைதி காக்கும் பணிகளுக்காக மேலும் 1132 படையினர்

#Peacekeeping #UNPeacekeeping #PeacekeepingForces #AdditionalTroops #MilitaryDeployment #1132Troops #GlobalPeace #PeaceSupportOperations

ஜூன் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து மேலும் 1132 பேர் கொண்ட படையினர் புறப்படவுள்ளனர்.

இதில் பல்வேறு படைப்பிரிவுகளைச் சேர்ந்த 900 இராணுவத்தினரும், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 189 அதிகாரிகளும், நாட்டின் இராணுவ வரலாற்றிலேயே முதன்முறையாக கண்ணிவெடிகள் மற்றும் பொறிகளை செயலிழக்கச் செய்வதற்கான விசேட பயிற்சி பெற்ற 43 பெண் இராணுவ வீரர்களும் உள்ளடங்குகின்றனர்.

இது தவிர, கவச வாகனங்கள், இலங்கையில் தயாரிக்கப்பட்ட ‘யூனிபஃபல்’ (Unibuffel) வாகனங்கள் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினால் வழங்கப்பட்ட விசேட குண்டு துளைக்காத வாகனங்கள் 02 என்பனவும் இந்த படையணிக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹைட்டி நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழலைத் தணித்து, அங்கு அமைதியை நிலைநாட்டும் நோக்கில், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இந்தப் படையினர் ஹைட்டிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இப்படையினருக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று (26) முற்பகல் பனாகொடை, இலங்கை காலாட்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

ஐக்கிய நாடுகளின் அமைதிப்படை பணிகளுக்காக இலங்கையிலிருந்து செல்லும் அதிகளவான படையினரைக் கொண்ட குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்க ஜனாதிபதி ஒருவர் வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலை கலவரங்களால் ரூ.255 மில்லியனுக்கும் அதிக சேதம்!

ஆகஸ்ட் 11, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இலங்கையில் முதல் முறையாக AI ரோபோடிக் சத்திர சிகிச்சை

ஜூலை 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் சமூக நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு 100 மில்லியன் டொலர் நிதி

அக்டோபர் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அம்பாறை பகுதியில் வீடொன்றில் தீ பரவல்

செப்டம்பர் 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube