Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

கொக்கட்டிச்சோலையில் பத்மநாபா தியாகிகள் தின நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

ஆனி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபக பொதுச்செயலாளர் தோழர் பத்மநாபா உள்ளிட்ட தியாகிகளின் 36-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டு கொக்கட்டிச்சோலையில் இன்று சனிக்கிழமை (27) பத்மநாபா அறிவியல் கழகத்தின் தலைவர் ஜெ. வினோகாந்தன் தலைமையில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.

பத்மநாபா அறிவியல் கழகத்தின் ஏற்பாட்டில், கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவு கலாசார மண்டபத்தில் இந்த நினைவேந்தல் உணர்பூராம இடம்பெற்றது. இந்த நினைவேந்தலில் பிரதம அதிதிகளாக கொக்கட்டிச்சோலை பிரதேச சபை தவிசாளர் திரேஸ்குமார் மற்றும் பிரதி தவிசாளர், வைத்தியர் க. மாதவன். மற்றும் கட்சி உறுப்பினர்கள் கட்சிகளின் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற கொக்கட்டிச்சோலை படுகொலை, சத்துருக்கொண்டான் படுகொலை, வெருகல் படுகொலை, காத்தான்குடி படுகொலை அரந்தலாவ படுகொலை உள்ளிட்ட பல்வேறு கொடூரமான படுகொலைகளில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கும், தியாகிகளையும் நினைவு கூர்ந்து சுடரேற்றி, மலர் தூவி, இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி தியாகிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தியாகிகள் தினத்தை முன்னிட்டு, மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில் 120 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையாக பணம் வழங்கி வைத்ததுடன் இந்த வருடம் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 4 மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையாக தலா 15.000 ஆயிரம் ரூபாவும் மடிகளணி மற்றும் ஒலிபதிவு கருவிகளையும் இவர்களின் பல்கலைக்கழக படிப்பை பூர்தி செய்யும் வரை இவர்களுக்காக மாதாந்தம் பணம்; முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது

அத்துடன் இளையோரின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் முகமாக நான்கு விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

நுகேகொடையில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை முயற்சி; நிறுவனத்திற்கு ரூ.75,000 அபராதம்!

ஆனி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலாவதியான உரப் பொருள் கைப்பற்றல்

ஆடி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இலங்கை மகள்.

புரட்டாதி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

எல் நினோ தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

புரட்டாதி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube