Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாசினிமா

“திரைக்கதை மன்னன்” கே.பாக்யராஜ்

ஆனி 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்

பிரபல நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் நேற்று (27) மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 73. தமிழ் சினிமாவில் தனது தனித்துவ திரைக்கதை பாணியால் வெகுவாக ஈர்த்தவரும், நகைச்சுவையுடன் கூடிய நடிப்பாற்றலால் ரசிகர்களை மகிழ்வித்தவருமான பாக்யராஜின் இழப்பால் தமிழ்த் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சினிமா துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக இயக்குநர்கள் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் பாரதிராஜா ஆகியோரின் உதவி இயக்குநராக அவர் பணியாற்றினார். கடந்த 1977-ல் தனது திரைப்பயணத்தை அவர் தொடங்கினார்.

இதில் பாரதிராஜாவுடன் ‘16 வயதினிலே’, ‘கிழக்கே போகும் ரயில்’ உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். கிழக்கே போகும் ரயில் மற்றும் டிக் டிக் டிக் படங்களுக்கு பாரதிராஜாவுடன் இணைந்து கதை எழுதினார். சிகப்பு ரோஜாக்கள் படத்துக்கு வசனம் எழுதியவர், துணை கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வந்தார்.

சுவர் இல்லாத சித்திரங்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கிய அவர், தனது படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், தூறல் நின்னுபோச்சு, டார்லிங் டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு, தாவணிக் கனவுகள், சின்ன வீடு, அவசர போலீஸ் 100, ராசுக்குட்டி, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சொக்கத்தங்கம், சித்து +2 உள்ளிட்ட படங்களை இயக்கி நடித்துள்ளார். இதோடு திரைப்படத்துக்கு பின்னணி இசை அமைத்து, பாடலும் பாடி உள்ளார். ‘பாக்யா’ என்று வார இதழின் ஆசிரியராக இயங்கி வந்தார்.

இயக்குநராக மட்டுமல்லாமல், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், வாகை சூடவா, துப்பறிவாளன், டாடா, குபேரா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகராகவும் பாராட்டைப் பெற்றார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மேலும் சித்தி 2, ராஜா ராணி, செந்தூரப்பூவே போன்ற தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். காபி வித் டிடி, ஜூனியர் சூப்பர் ஸ்டார், கோடீஸ்வரி உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

‘திரைக்கதை மன்னன்’ என்று போற்றப்படும் பாக்யராஜின் படங்கள் ஜனரஞ்சகமாக இருக்கும். கதை, வசனங்கள், காமெடி என அவரது படங்கள் கவனம் ஈர்க்கும். சிறந்த திரைக்கதை ஆசிரியராக அறியப்பட்டவர்.

தனது சினிமா பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகளில் இணைந்து அவர் பணியாற்றி உள்ளார். இயக்குநர்கள் பார்த்திபன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் பாக்யராஜின் உதவி இயக்குநர்களாக பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.ஜி.ஆர் மீது மிகுந்த பற்று கொண்டிருந்த பாக்யராஜ், 1989-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். பின்னர் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளில் செயல்பட்ட அவர், அதன் பிறகு அரசியலில் இருந்து விலகினார்.

கடந்த 10-ம் தேதி இயக்குநர் பாரதிராஜா காலமான நிலையில் இன்று (ஜூன் 27) இயக்குநர் பாக்யராஜ், மாரடைப்பு காரணமாக காலமானது திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஐம்பது ஆண்டுகள் தமிழ் சினிமாவை தனது படைப்பாற்றலால் வளப்படுத்திய கே. பாக்யராஜின் படைப்புகளும், திரைக்கதை பாணியும், தலைமுறைகள் கடந்தும் ரசிகர்களின் நினைவில் நிலைத்திருக்கும்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலேவை பாதுகாக்க கோட்டையில் போராட்டம்!

ஆனி 8, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் சமூகவலைத்தள கட்டுப்பாடுகள்!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீரற்ற காலநிலை காரணமாக 7 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது!

வைகாசி 22, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

15ஆம் திகதி முதல் மதுபானங்களின் விலை அதிகரிப்பு!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube