Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்காசிய AI வளர்ச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான்

ஆடி 10, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) வளர்ச்சி தொடர்பான உயர்மட்ட மாநாட்டில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் தொண்டமான், தெலுங்கானா அரசின் அழைப்பின் பேரில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

தெலுங்கானா துணை முதலமைச்சர் மல்லு பாட்டி விக்ரமார்கா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு துறையில் தெலுங்கானாவை முக்கிய மையமாக உருவாக்குவதற்கான எதிர்கால திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பிரமுகர்களும் பங்கேற்றனர்.

இலங்கையில் பல்வேறு துறைகளில் செந்தில் தொண்டமான் முன்னெடுத்ததாகக் கூறப்படும் அபிவிருத்தி மற்றும் சமூகநலத் திட்டங்கள், நெருக்கடி காலங்களில் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அவரது அனுபவங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார வசதி விரிவாக்கம், கல்வித் துறையில் ஆசிரியர் உருவாக்கத் திட்டம், மலையக மக்களுக்கான வீடமைப்பு, முதியோர் ஓய்வூதியத் திட்டம், தோட்டப் பகுதிகளில் அடிப்படை வசதி மேம்பாடு, பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட்-19 கால உதவித் திட்டங்கள், இலங்கை அகதிகளுக்கான கடவுச்சீட்டு வழங்கல் மற்றும் கிழக்கு மாகாணத்தில் காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் மாநாட்டில் எடுத்துக்காட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசுமை வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்கால அபிவிருத்தி குறித்து நடைபெற்ற இந்த மாநாட்டில், செந்தில் தொண்டமான் தனது கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

QR முறை மூலம் தேயிலை உற்பத்தியாளர்களுக்கு உர மானியம்!

சித்திரை 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மருதங்குளம் கலைமகள் முன்பள்ளியின் சிறுவர் விளையாட்டு முற்றம் திறந்து வைப்பு!

வைகாசி 31, 2026
இலங்கை

பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று சர்வதேச நாணய நிதியத்தின் இயக்குனர் சபை கூடுகிறது!

வைகாசி 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube