Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷை வீழ்த்திய தென் ஆபிரிக்க அணி!

ஆனி 28, 2026
படிக்க 2 நிமிடங்கள்

லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற பங்களாதேஷுக்கு எதிரான குழு 1 மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 4 விக்கெட்களால் வெற்றியீட்டிய தென் ஆபிரிக்கா, அரை இறுதி வாயிலில் ஒரு காலை பதித்துள்ளது.

இந்த வெற்றியுடன் தென் ஆபிரக்கா அணிகள் நிலையில் தற்போது 8 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கின்றபோதிலும் அதன் நிகர ஓட்ட வெகம் இந்தியாவைவிட குறைவாக இருக்கிறது.

இந் நிலையில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கடைசி லீக் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் தென் ஆபிரிக்கா வெளியேறும்.

இந்தியா தோல்வி அடைந்தால் தென் ஆபிரிக்கா நான்காவது தொடர்ச்சியான தடவையாக அரை இறுதிக்குள் பிரவேசிக்கும்.

இந்தியாவை அவுஸ்திரேலியா வெற்றிகொள்ளும் என்ற நம்பிக்கையில் இன்றைய போட்டியில் வெற்றியை மாத்திரம் குறிவைத்து பங்களாதேஷை எதிர்த்தாடிய தென் ஆபிரிக்கா அதனை நிறைவேற்றிக்கொண்டது.

ஆனால், அந்த வெற்றி இலகுவாக அமையவில்லை.

பங்களாதேஷின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட தென் ஆபிரிக்கா, 4 பந்துகள் மீதம் இருக்க 6 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்தது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சோபனா மோஸ்தரி 42 ஓட்டங்களையும் அணித் தலைவி நிகார் சுல்தானா 32 ஓட்டங்களையும் ஷாமின் அக்தர் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைபற்றினார்.

மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 9 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆன்றீ டேர்க்சன் 45 ஓட்டங்களையும் தஸ்மின் ப்றிட்ஸ் 20 ஓட்டங்களையும் மாரிஸ்ஆன் கெப் 16 ஓட்டங்களையும் நாடின் டி க்ளார்க் 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் நஹிதா அக்தர் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்டபாய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை!

ஆனி 3, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

தொடரை கைப்பற்றுமா இலங்கை அணி

ஆனி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறக்குவானையில் யானை தாக்கி பாகனும் உதவியாளரும் பலி!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையை வந்தடைந்தது ‘மெயின் ஷிப் 6’ அதிநவீன சொகுசுக் கப்பல் !

வைகாசி 21, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube