Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வாவியில் குதித்த 19 வயது யுவதி

#மட்டக்களப்பு #கல்லடிபாலம் #மீனவர்கள் #யுவதி #உயிர்காப்பு #மட்டக்களப்புபோதனாவைத்தியசாலை #பொலிஸ்விசாரணை #இலங்கைசெய்திகள் #தமிழ்செய்திகள் #BreakingNews #Batticaloa #SriLankaNews

அக்டோபர் 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் இருந்து வாவியில் குதித்த 19 வயது யுவதியை, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீட்டு உயிரைக் காப்பாற்றிய சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இரவு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இரவு சுமார் 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின்போது, யுவதி தனது குடை மற்றும் கைப்பை உள்ளிட்ட பொருட்களைப் பாலத்தில் விட்டுவிட்டு வாவியில் குதித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனை அவதானித்த வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாகச் செயல்பட்டு, யுவதியை நீரிலிருந்து மீட்டு கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

இதனையடுத்து, 1990 அவசர அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் யுவதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த யுவதி வேறு பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கும் பொலிஸார், அவர் இவ்வாறு செயற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்லடி பாலத்தில் தொடரும் துயரச் சம்பவங்கள்

இதேவேளை, கடந்த மாதமும் குறித்த பாலத்தில் இருந்து இளைஞர் ஒருவர் வாவியில் குதித்து உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 90 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸ் மாவட்டப் பிரிவின் புள்ளிவிபரத் தரவுகள் தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்கொலை முயற்சிகளைத் தடுப்பதற்கும், மன உளைச்சலில் இருப்பவர்களுக்கு உரிய நேரத்தில் உதவிகளை வழங்குவதற்கும் சமூக மட்டத்தில் விழிப்புணர்வும் ஆதரவும் அவசியம் என்பதை இச்சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டு மக்களுக்கு எதிரான எந்த தீர்மானத்தையும் எடுக்கப்போவதில்லை – ஜனாதிபதி

ஆகஸ்ட் 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தடுப்பூசி செலுத்தாமல் 5க்கும் மேற்பட்ட நாய்களை வளர்த்தவருக்கு எதிராக வழக்கு தாக்கல்

அக்டோபர் 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெர்பெச்சுவல் டிரஷரீஸ் இடைநீக்கம் மேலும் 6 மாதங்கள் நீட்டிப்பு

ஜூலை 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டியில் கட்டிடம் உடைந்து விழுந்ததில் 2 தொழிலாளர்கள் காயம்!

மே 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube