ஹெட்டிப்பொல – ஹந்துன்கமுவ வீதியின் 42வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் ஞாயிற்றுக்கிழமை (28) பகல் வேளையில் மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உடனடியாக ஹந்துன்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மஹியங்கனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் ஹந்துன்கமுவ பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய ஆவார். ஹந்துன்கமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
