Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுசீரமைப்புக்காக விசேட குழு!

ஆனி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்புக்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய தலைமையில் இந்தக் குழு செயற்படவுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, நிதி மற்றும் நிறுவன மூலோபாய நிபுணர் தேஷால் த மெல் மற்றும் முதலீட்டு வங்கியியல் நிபுணர் துமித் பெர்னாண்டோ உள்ளிட்டோர் இந்த ழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

அத்துடன் நிதி அமைச்சு, போக்குவரத்து அமைச்சு, சிவில் வானூர்தி சேவைகள் அதிகாரசபை மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளும், சட்ட மற்றும் வானூர்தித் துறை நிபுணர்களும் இதில் இடம்பெறவுள்ளனர்.

அதற்கமைய, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தொடர்பாக பரந்த பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு விரிவான மூலோபாய மீளாய்வை மேற்கொள்வது அவசர முன்னுரிமை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நீண்டகால நிதிச் சுமையைக் குறைத்து, நிதி ரீதியாக நிலைபேறானதும் வணிக ரீதியாக செயற்திறன் மிக்கதுமான தேசிய வானூர்தி சேவையை உருவாக்குவதே இந்த மீளாய்வின் பிரதான நோக்கமாகும்.

மூலோபாய மீளாய்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடையும் வரை அல்லது அரசாங்கத்தினால் கலைக்கப்படும் வரை இந்தக் குழு செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர்!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபர் தப்பியோட்டம்!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பால் மாவின் விலை அதிகரிப்பு

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீகொடை தானசாலை விபத்து – வாகன உரிமையாளர் உள்ளிட்ட இருவருக்கு விளக்கமறியல்!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube