அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோகந்தரை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், அதி சக்திவாய்ந்த 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் போலி இலக்கத் தகடுகள் 2 உடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (29) ஹோமாகம பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய ஹோகந்தரை பகுதியைச் சேர்ந்த நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
