பேலியகொடை பகுதியில் அமைந்துள்ள களனிப் பாலத்திற்கு அருகில் கொள்கலன் லொறி ஒன்று திடீரென பழுதடைந்து நின்றுள்ளதால், கொழும்பு நகருக்குள் நுழையும் பல பிரதான வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து காரணமாக வீதியின் ஒரு பகுதி முழுமையாகத் தடைப்பட்டுள்ளதால், இன்று (01) புதன்கிழமை காலை வேளையில் கொழும்பு நகருக்குள் பணி நிமித்தம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக நுழைய முற்பட்ட வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் நீண்ட நேர தாமதங்களை எதிர்கொண்டு பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
