Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிகரித்த டெங்கு பரவலுக்கு அரசின் மெத்தன போக்கே காரணம் – சஜித் பிரேமதாச

ஆடி 2, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரசாங்கத்தின் டெங்கு ஒழிப்பு கொள்கையானது மிகவும் பலவீனமானதாகக் காணப்படுகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சுகாதாரத் துறையினர் மீது மாத்திரம் விரல் நீட்டுவதை விடுத்து, அதிகளவிலான டெங்கு பரவலைக் கொண்டுள்ள மேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்க வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க ஒடுக்குமுறைக்கு எதிராக, கூட்டுத் தொழிற்சங்க சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் போராட்டம் தொடர்பில், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (1) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

இன்று நாளாந்தம் சுமார் 1000 டெங்கு நோயாளர்கள் வரை அதிகரித்து வருகின்றனர். இதனால் நாட்டின் மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியுள்ளதுடன், இதுவரை 32 மரணங்களும் பதிவாகியுள்ளன. குறிப்பாக 14 நிர்வாக மாவட்டங்களிலுள்ள 538 கிராம சேவகர் பிரிவுகளில் இப்பிரச்சினை பாரியளவில் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம ஏற்கனவே எச்சரித்துள்ளதுடன், ‘பிரெட்டோ சுட்டெண்’ அபாயகரமான நிலையை எட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த விபரீதம் குறித்து அரசியல் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே அறிவித்த போதிலும், அவர்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை. அவர்களின் இந்த அலட்சியப் போக்கின் காரணத்தினாலேயே இன்று டெங்கு அரக்கன் மீண்டும் தலைதூக்கியுள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் சுகாதாரத் துறையினர் மீது மாத்திரம் விரல் நீட்டுவதை விடுத்து, அதிகளவிலான டெங்கு பரவலைக் கொண்டுள்ள மேல் மாகாணத்தின் உள்ளூராட்சி மன்றங்களைப் பலப்படுத்தும் வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்திருக்க வேண்டும்.

தொழிலாளர் உரிமைகளுக்காக மேடைகளில் குரல் கொடுத்த கடுவலை மேயர், இன்று கடுவலை நகரை இலங்கையிலேயே மிகவும் அசுத்தமான பகுதியாகவும், ஒரு டெங்கு குகையாகவும் மாற்றியுள்ளார் என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

1080 லீட்டர் கோடாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

ஆனி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வறட்சியால் பாதிக்கப்பட்ட 25647 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கல் திட்டம்

புரட்டாதி 1, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

விஜய் மல்லையா கடன் நிலுவை விவகாரம் – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஆவணி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube