நாட்டின் இருவேறு பகுதிகளில் நேற்று புதன்கிழமை (01) பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடா என்பவற்றுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மகாபாகே – தொம்பகஹாவத்த பகுதியில் மகாபாகே பொலிஸாரால் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பதற்கு வைக்கப்பட்டிருந்த 1697 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 57 வயதுடைய ராகம பகுதியை சேர்ந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, ராகமை – பொடிவிகும்புர பகுதியில் வலானை மத்திய ஊழல் தடுப்பு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையில் 375 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளன.
ராகமை பகுதியை சேர்ந்த 43 வயதுடையவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
