Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூலை 4 இல் சபரகமுவ பல்கலைக்கழக மருத்துவப் பீடம் திறப்பு!

ஆடி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடம், எதிர்வரும் ஜூலை மாதம் 04ஆம் திகதி மாணவர் பாவனைக்காகக் கையளிக்கப்படும் என அந்த மருத்துவப் பீடத்தின் பீடாதிபதி சிரேஷ்ட பேராசிரியர் நிர்மலி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.

இதில் சபரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் சவுதி அரேபிய அபிவிருத்தி நிதியத்தின் பிரதித் தலைவர் பொறியியலாளர் பைசல் எம். அல்கஹ்தானி (Eng. Faisal M. Alkahtani) உட்படப் பல முக்கிய விருந்தினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகப் பீடாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் சவுதி அரேபிய அரசாங்கங்களின் கூட்டு நிதிப் பங்களிப்பின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த மருத்துவப் பீடமானது இரத்தினபுரி புதிய நகரை அண்மித்த பகுதியில் அமைந்துள்ளது.

20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள இந்த மருத்துவப் பீடத்தில், நடப்பு வருடத்திற்காக 162 மருத்துவ மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். அத்துடன் தற்போது இங்கு சுமார் 750 மருத்துவ மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

இப்பீடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை அரசாங்கம் 1,096 மில்லியன் ரூபா நிதியை வழங்கியுள்ளதுடன், சவுதி அரேபிய அரசு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியாக வழங்கியுள்ளது.

இந்த மருத்துவப் பீட வளாகமானது ஒரே நேரத்தில் 500 மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கக்கூடிய விடுதிக்கட்டிடத்தையும், 1,060 பேர் ஒரே நேரத்தில் அமரக்கூடிய திறன் கொண்ட பிரம்மாண்ட மண்டபம் (Auditorium) ஒன்றையும் உள்ளடக்கியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

“உழைக்கும் மக்களின் உரிமைகளே நாட்டின் முன்னேற்றத்தின் அடித்தளம்” 

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஸ்கெலியாவில் திடீர் வாகன பரிசோதனை!

வைகாசி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைபொருளுடன் 17 சிறுவன் ஒருவன் மற்றும் 28 வயது இளைஞன் கைது

ஆடி 13, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

‘மில்க் பிகிஸ்’ பிஸ்கட்களில் திருக்குறள்!

ஆடி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube