Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டும் 15 மாத கால முன்னோடித் திட்டம் நிறைவு!

ஆடி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளால் பாதிக்கப்பட்டு, பாதுகாப்பு இல்லங்களில் தங்கியிருந்த பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கான 15 மாத கால முன்னோடித் திட்டத்தின் இறுதி மதிப்பீட்டு முடிவுகள் நேற்று (2) வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் நிதி உதவியுடன், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம்  ஆகிய அமைப்புகள் இணைந்து, “பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்தல்” திட்டத்தின் கீழ் இதனை முன்னெடுத்தன.

வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் மேல் மாகாணங்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் பெண்களுக்குத் தொழில்சார் பயிற்சிகள் மற்றும் சுயதொழில் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதோடு, பாதுகாப்பு இல்லப் பணியாளர்களின் திறன் மேம்பாடும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்ற கனடா உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புக்கான தலைவர்  கிரில் இயோர்டனோவ் குறிப்பிடுகையில்,

இலங்கையிலும் உலகளவிலும் பாலின சமத்துவத்தை மேம்படுத்த கனடா உறுதியுடன் உள்ளது. பெண்களுக்குப் பாதுகாப்பு, சுயதிறன்கள் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் கிடைக்கும்போது, அவர்களால் தங்களது வாழ்க்கையை கண்ணியத்துடனும் நம்பிக்கையுடனும் மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளை வலுப்படுத்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் மற்றும் இலங்கை நிறுவனங்களுடன் இணைவதில் பெருமையடைகிறோம்” என்றார்.

முறையான கண்காணிப்புக் கட்டமைப்பின் மூலம் இத்திட்டத்தின் நீண்டகாலத் தாக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மறைந்த மூத்த பாடகி நந்தா மாலினிக்கு மௌன அஞ்சலி

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொதுமக்களின் அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

ஆவணி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நடைமுறைப்படுத்த அரசு அவதானம்

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அனர்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube