Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹெட்போன் அணிந்து வீதியில் நடந்தால் சட்ட நடவடிக்கை; பொலிஸார்

#SriLanka #TrafficSafety #RoadSafety #Headphones #Earphones #Police #PedestrianSafety #AccidentPrevention #SriLankaPolice #TamilNews #BreakingNews

ஆடி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்துகொண்டு இசையைக் கேட்டபடி வீதிகளில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை பொலிஸாரின் போக்குவரத்துப் பாதுகாப்பு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, இவ்வாறு ஹெட்போன் அல்லது இயர்போன் அணிந்தபடி வீதியில் செல்வதால் பாதசாரிகள் விபத்துகளுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதுவரை இவ்வாறானவர்களுக்கு எச்சரிக்கை மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில், இனிமேல் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

11ஆவது தேசிய விபத்துத் தடுப்பு வாரத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சாமிமலை பெயார்லோன் தமிழ் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரிசிக்கான தட்டுப்பாடு ஏற்படாது!

ஆனி 25, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

விஜய்க்கு ஆதரவாக கமல் ஹாசன் பதிவு…!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு விமானப்படை முகாமின் முன்னால் மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி வாவியில் வீழ்ந்ததில் 20 வயது இளைஞன் உயிரிழப்பு

வைகாசி 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube