அரலகன்வில, பிம்பொகுண பகுதியில் குடும்பத் தகராறைத் தொடர்ந்து கணவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் 29 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிம்பொகுண பகுதியைச் சேர்ந்த குறித்த பெண் தாக்குதலுக்குப் பின்னர் அரலகன்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, குடும்பத் தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தலைமறைவாக உள்ளதாக நம்பப்படும் உயிரிழந்த பெண்ணின் கணவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
