மோதரை பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு ரி-56 ரக துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் ‘மோதர சத்துர’ எனப்படும் சந்தேகநபரிடம் இருந்து பெறப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளும் பயன்படுத்தக்கூடிய நல்ல நிலையில் காணப்படுவதாக தெரிவித்த பொலிஸார் சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, தற்போது துபாயில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ‘மோதர நிபுண’ என்பவரின் சகோதரரே இந்த ‘மோதர சத்துர’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
