Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும் – விமல் வீரவன்ச

ஆடி 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்

பணமோசடி தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், பணமோசடி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய வங்கியின் விசேட குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்குழு தீர்மானித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் கூட செல்ல முடியாதவாறு கறுப்புப் பணத்த்துக்குப் பெரிய கதவு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமைப் காரியாலயத்தில் நடைபெ ற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணமோசடி தடுப்புச் சட்டத் திருத்தத்தின் மூலம், பணமோசடி குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய வங்கியின் விசேட குழுவொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது. அக்குழு தீர்மானித்தால் அதற்கு எதிராக நீதிமன்றம் கூட செல்ல முடியாதவாறு கறுப்புப் பணத்துக்குப் பெரிய கதவு திறந்து விடப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கறுப்புப் பணம் நாட்டுக்குள் வரும்போது, நாட்டின் காணி நிலங்களையும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலுள்ள சொத்துக்களையும் அவர்களால் எளிதாக வாங்க முடியும்.

அதற்குத் தடையாக இருந்த மகாவலி அபிவிருத்தி அதிகார சபையை இல்லாது ஒழிக்கும்போது, அதன் கீழ் இருந்த வடக்கு மற்றும் கிழக்கின் அனைத்து காணி நிலங்களும் பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டு செல்லப்பட்டு, அந்தக் கறுப்புப் பணத்தைக் கொண்டு தமக்குத் தேவையான சொத்துக்களை தடையின்றி வாங்கிக் கொள்ள வழிவகை செய்யப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அமைந்து மின்சார சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களை விற்க முற்படும் போது, அந்த முக்கிய இடங்களை மிக மலிவான விலைக்கு வாங்கிக் கொள்ளும் வாய்ப்பு இதன் மூலம் உருவாகும். இதற்குத் தடையாக இருக்கும் விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டத்துக்கும், தொல்பொருள் சட்டத்ததுக்கும் இப்போது சூழ்ச்சி செய்யப் போகிறார்கள். இந்தத் துரோகங்களுக்கு எதிராகப் போராடக்கூடிய பௌத்த துறவிகளையும் சமூகக் கட்டமைப்பையும் அடித்து வீழ்த்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அரசாங்க அமைச்சர்களின் சொத்துக்கள் பாரியளவில் அதிகரித்துள்ளமை குறித்தோ அல்லது அசோக ரன்வலவின் போலி கலாநிதி பட்டம் குறித்தோ எவ்வித விசாரணைகளும் நடத்தப்படுவதில்லை.

மாறாக, ஷானி அபேசேகர போன்ற அதிகாரிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்குள் நுழைத்துக் கொண்டு, சட்டமா அதிபர் ஆகும் பேராசையோடு இருக்கும் சிலரை நீதிமன்றங்களுக்கு அனுப்பி, பேச்சுச் சுதந்திரத்தை முடக்கி சமூகத்தை முடக்குவதே இவர்களின் நோக்கமாக உள்ளது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள சமீரா மஹ்பூப்டீனினை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கடிதம்!

வைகாசி 21, 2026
இந்தியாஇலங்கை

தமிழ்நாடு முதல்வரை சந்தித்த இலங்கை துணை உயர்ஸ்தானிகர்!

ஆடி 4, 2026
Breaking Newsஇலங்கைமுக்கியச் செய்திகள்

Breaking எரிபொருள் விலை குறைப்பு

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தம்பலகாமம் – பரவிபாஞ்சான் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கள்ளச்சாராய உற்பத்தி பகுதி பொலிஸாரால் முற்றுகை!

வைகாசி 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube