கிரிபத்கொட, ஹுனுபிட்டிய பகுதியில் நேற்று (04) இரவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, தீர்வையற்ற (Duty-free) முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 14,600 சிகரெட்டுகள், 28 வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுக்கு (E-cigarettes) பயன்படுத்தப்படும் 71 கிலோ 800 கிராம் இரசாயனப் பொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டவர் ஹுனுபிட்டிய பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் என்பதுடன், கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
