Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

ஹட்டன் – நுவரெலியா பாதையில் மண்சரிவு!

ஆடி 5, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மலையக பிரதேசங்களில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நேற்று சனிக்கிழமை (04) மாலை 5:30 மணி பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹட்டன் – நுவரெலியா பாதையின் போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக நேற்றைய தினம் முழுவதும் ஹட்டன் பகுதியில் பெய்த பலத்தமழையினால், குடகம பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், குறித்த மண்சரிவினால் வீதியில் போக்குவரத்து ஒருவழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரதான வீதியில் ஏற்பட்டுள்ள மண் மேட்டினை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியாளர் பிரிவினர் தெரிவித்தனர்.

கடந்த நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் நிலவிய சீரற்ற வானிலையால் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இப்பகுதியில் பல இடங்களில் மண்சரிவுக்கான அறிகுறியாக அபாயகரமான வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இவ்வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் விழிப்பாகவே இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorized

180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்துகின்றவர்களுக்கு 18% கட்டண அதிகரிப்பு!

வைகாசி 9, 2026
Uncategorized

விஜய்க்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் அறிக்கை!

வைகாசி 7, 2026
Uncategorized

எரிபொருள் செலவு உயர்வு; நாளை முதல் தனியார் பேருந்து சேவைகள் 50% வரை குறைய வாய்ப்பு!

ஆனி 7, 2026
Uncategorized

நொடோஜிமன் 2026(Nodojiman) ஜப்பான் பாடல் போட்டி!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube